முதலமைச்சரை கொன்றால் 10 லட்சம் பரிசு?! – சுவரொட்டியால் சர்ச்சை

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (14:02 IST)
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு பரிசு என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் உள்ள வழிகாட்டி பலகை ஒன்றில் பஞ்சாப் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கை கொல்பவர்களுக்கு 10 லட்சம் பரிசு என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரை கைப்பற்றிய போலீஸார் அதில் இருந்த அச்சக விவரம் மற்றும் இமெயிலை சைபர் க்ரைம் பிரிவுக்கு அனுப்பி இதை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு மிரட்டல் வருவது புதிதல்ல என்றும், முன்னதாக டிசம்பர் 14லும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்சுறுத்தல் காலிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படுபவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments