உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் உலக நாடுகள் அனைத்துயும் அச்சுறுத்தி வருகிறது. பனிப்பாறைகள் உருகி வருவதாகவும், பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் விஞ்ஞானிகளால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பசிபிக் மற்றும் ஆசிய பகுதிகளில் பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆசிய மேம்பாட்டு வங்கி ஆய்வு நடத்திய ஒன்றில் சீனா, இந்தியா, வங்கதேசம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டுக்குள் 136 கடலோர பெருநகரங்கள் கடலில் மூழ்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் 20 நகரங்கள் ஆசிய கண்டத்தில் உள்ளது. இந்தியாவில் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.