Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் தாக்கலானது குடியுரிமை சட்டதிருத்த மசோதா..

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (12:55 IST)
தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும். மேலும் இச்சட்டப்படி அகதிகளாக குடியேறும் இந்த 6 மதத்தவர்களும் 6 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். முன்னதாக விதிப்படி 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தில் இடமில்லாததால் இது சிறுபான்மையினருக்கு எதிரானது எனவும் அரசியலமைப்பு சட்டத்தின் அனைவரும் சமம் என்ற சட்டவிதிகளுக்கும் எதிரானது எனவும் எதிர்கட்சிகளும் பல அமைப்புகளும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்களவையில் இச்சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல எனவும், மசோதாவில் பாகுபாடுகள் எதுவும் காட்டப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments