நாட்டில் கள்ள நோட்டுப் புழக்கம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நள்ளிரவில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.100 ஆகிய நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் அறிவிபை பிரதமர் மோடி அறிவித்தார்.
இதற்குப் பதில், ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 ஆகிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர் என்றாலும், கள்ள நோட்டுப் பணப்புழக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தப் பணமதிப்பிழப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்து, கடும் விமர்சனங்கள் முன் வைத்தன. இந்த நிலையில், இன்று மத்திய நிதியமைச்சகம் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் ரூ.43.46 கோடி கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் ரூ.8.25 கோடி அளவுக்குத்தான் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.