Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் போகலையா நீங்க? எல்லையில் சீன ராணுவம்! – நீடிக்கும் பதற்றம்!

Advertiesment
இன்னும் போகலையா நீங்க? எல்லையில் சீன ராணுவம்! – நீடிக்கும் பதற்றம்!
, வியாழன், 23 ஜூலை 2020 (08:19 IST)
லடாக் எல்லைப்பகுதியில் சீன – இந்தியா படைகளுக்கு ஏற்பட்ட மோதலின் விளைவாக இருநாட்டு படைகளும் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்த நிலையிலும் சீன ராணுவம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன – இந்திய ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்தியாவில் சீன பொருட்கள், செயலிகல் முதலியவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளாமல் இருக்க சமாதான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அரசு மற்றும் ராணுவ தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் எல்லை பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளையும் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி வழக்கமான எல்லைக்காவல் பணிகளில் இருக்கும் வீரர்களை தவிர்த்து கூடுதலாக குவிக்கப்பட்ட இந்திய வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். ஆனால் டெப்சாங் சமவெளி பகுதிகள் மற்றும் கோக்ரா பகுதிகளில் சீன படைகள் திரும்ப பெறப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அங்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் சீன வீரர்களும், ராணுவ தளவாடங்களும் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது மேலும் எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.53 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: 6.29 லட்சம் பேர் உயிரிழப்பு