Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் செல்ஃபி பூத் குறித்த RTI கேள்விக்கு பதிலளித்த தலைமை PRO பணியிடை மாற்றம்

selfi pint pm
, புதன், 3 ஜனவரி 2024 (13:44 IST)
பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்களை RTI மூலம்          கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அதிகாரியான ரயில்வே தலைமை PRO இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி   நடந்து  வருகிறது.
 
இந்த நிலையில், 50 ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்களை RTI மூலம்             கேட்கப்பட்ட கேள்விக்கு தற்காலிக பூத் அமைக்க ரூ.1.25 லட்சமும்,   நிரந்தர பூத் அமைக்க ரூ.6.25 லட்சமும் செலவிடப்படதாக மத்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் தலைமை மக்கள்  தொடர்பு அதிகாரி டாக்டர் சிவ்ராஜ் மனஸ்புரே  தகவல் அளித்திருந்தார்.

இந்த செலவினங்கள் பற்றி அரசியல்  கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விமர்சனம் கூறி வரும் நிலையில், இத்தகவல்களை RTI மூலம் அளித்த அதிகாரியான் ரயில்வே தலைமை PRO இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 2023 ஆம் ஆண்டு ரயில்வேயில் வழங்கப்படும் உயரிய விருதான Ati Vishisht Rail puraskar என்ற விருதினை பெற்றவர் ஆவார். இவரது பணியிட மாற்றமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு குட் நியூஸ்..!!