Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை - அந்தமான் விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் அவதி!

Advertiesment
Flight
, புதன், 2 நவம்பர் 2022 (11:57 IST)
சென்னை மற்றும் அந்தமான் இடையே தினசரி விமானம் இயங்கி வந்த நிலையில் திடீரென சென்னை - அந்தமான் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அந்தமான் விமான நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவும் அந்தமான் பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாகவும் சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் அந்தமானில் இருந்து சென்னை வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் வரும் 4ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பின்னர் வானிலை நிலவரத்தை பார்த்து விமானத்தை மீண்டும் இயக்கும் அறிவிப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் சென்னை மற்றும் அந்தமான் இடையே செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??