சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில் சாதாரண ரயிலாக மாற்றம்: என்ன காரணம்?

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (11:33 IST)
அடுத்த மாதம் முதல் சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில், சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு  பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூருக்கு மதியம் 1:35மணிக்கு புறப்பட்டு, இரவு 7:55 மணிக்கு பெங்களூரை அடையும். அதன் பின் இரவு 10 மணிக்கு மைசூரை அடையும்.  இந்த ரயில், 23 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த அதிவிரைவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ரயிலின் வேகம் 55 கிலோ மீட்டர் என்று இருந்த நிலையில், வேகம் குறைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
அதே நேரத்தில், சாதாரண ரயிலாக மாற்றப்பட்ட பிறகு, இரண்டாம் வகுப்பு இயற்கைக்கு ரூ.15 மற்றும் சேர் கார் இருக்கைக்கு ரூ.45 கட்டணம் குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு சீசன் டிக்கெட் கட்டணமும் கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments