இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது என்பதும் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக சென்னை ஐஐடி இந்த இடத்தை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் இந்த தரவரசை உருவாக்கப்பட்டுள்ள வருகிறது.
மாணவர்களின் கற்றல், ஆசிரியர்களின் கற்பித்தல், ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி தரம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், பெங்களூர் ஐஏஎஸ்சி இரண்டாவது இடத்தையும், மும்பை ஐஐடி மூன்றாவது இடத்தையும், டெல்லி ஐஐடி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தையும் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.