Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கும் விடுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி

Advertiesment
தங்கும் விடுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி
, செவ்வாய், 26 ஜூலை 2016 (05:38 IST)
திருமலையில் தங்கும் விடுதிக்குள் சிறுத்தைப்புலி புகுந்ததால், பக்தர்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


 

 
திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகை உள்ளது. அதில் ஜனாதிபதி மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கி சாமி தரிசனத்துக்குச் செல்வார்கள். அங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகே நர்சிங் சதர்ன் தங்கும் விடுதி உள்ளது. அதில் 10 பக்தர்கள் தங்கி இருந்தனர்.
 
இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் சிறுத்தைப்புலி ஒன்று திடீரென நர்சிங் சதர்ன் விடுதிக்குள் புகுந்தது. இதனால் பக்தர்கள் அனைவரும் அலறியடித்து சத்தம் போட்டு ஓடி அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டனர். பக்தர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தைப்புலியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியிடம் சில்மிஷம் செய்த டாக்டர்