மல்லையா-அருண்ஜெட்லி சந்திப்பின் சிசிடிவி வீடியோ: காங்கிரஸ் எம்பி அதிரடி

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (19:01 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இந்தியாவை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் விஜய்மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், இதனை உறுதி செய்யும் சிசிடிவி வீடியோ இருப்பதாகவும், குறிப்பிட்ட தேதியின் வீடியோ பதிவுகளை கேமராவில் பரிசோதித்து பார்க்கலாம் என்றும் காங்கிரஸ் எம்.பி புனியா அதிரடியாக கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே அருண்ஜெட்லிக்கு எதிரான கருத்தை கூறியுள்ளதால் பாஜகவிற்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி, சிசிடிவி வீடியோ குறித்து கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்பி புனியாவின் சிசிடிவி வீடியோ குறித்த கருத்துக்கு பாஜகவும், அருண்ஜெட்லியும் என்ன பதில் அளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments