Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்திற்கு கரி பூசிய இளைஞர்கள்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (23:17 IST)
கேரளா மாநிலத்தில் சச்சின் டெண்டுல்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து, அவரது கட் அவுட்டுக்கு கருப்பு சாயம் பூசியுள்ளர் இளைஞர்கள்.
 

டெல்லியில் விவசாயிகள் எண்பது நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நேற்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருகுறித்துப் பதிவிட்டிருந்ததாவது :

இந்தியாவின் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக மட்டும் இருங்கள் பங்கேற்பாளர்களாக வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும். இந்தியா ஒற்றுமையால் கட்டமைப்பட்டது எனத் தெரிவித்தார். இதே கருத்தைத்தன் சுரேஷ் ரெய்னா, லதா மங்கேஸ்கர் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் சச்சின் கூறிய கருத்திற்கு சுமந்த் சி.ராமன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அதில், சச்சின் டெண்டுல்கர் தன்னை தவிர வேறு யாருக்காகவும் நின்றதில்லை ; அவர் யாரோ சொல்லித்தான் இந்த டுவீட் பதிவிட்டுள்ளார் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் சச்சின் டெண்டுல்கரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து, அவரது கட் அவுட்டுக்கு கருப்பு சாயம் பூசியுள்ளர் இளைஞர்கள்.

டெல்லியில் குளிரிலும் வெயிலிலும் அமர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவக கருத்துக்கூறிய சர்வதேச பிரபலங்களுக்கு எதிராக டுவிட்டரில் விமர்சனம் தெரிவித்த சச்சினுக்கு எதிராக கேரளாவில் உள்ள கொச்சியில் அவரது கட் அவுட்டுக்கு இளைஞர்கள் காங்கிரஸார்  கருப்பு சாயம் பூசியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments