Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் தரிசன முறையில் மாற்றம்: முழு விவரங்கள்..!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் தரிசன முறையில் மாற்றம்: முழு விவரங்கள்..!
Mahendran
புதன், 19 மார்ச் 2025 (13:04 IST)
திருமலை திருப்பதி தேவஸ்தானம்  யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
 
மார்ச் 30ஆம் தேதி  தெலுங்கு யுகாதி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, மார்ச் 25ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இந்த பாரம்பரிய முறையின் காரணமாக, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படும்.
 
மேலும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை அன்று நடைபெறாது எனவும், மார்ச் 30ஆம் தேதி யுகாதி அஸ்தான விழாவை முன்னிட்டு சஹஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
மேலும், மார்ச் 25 மற்றும் 30ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் விஐபி புரோட்டோகால் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படும். மார்ச் 24 மற்றும் 29 ஆகிய நாட்களில் விஐபி தரிசனத்திற்காக எந்த பரிந்துரை கடிதமும் ஏற்கப்படாது எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
பக்தர்கள் இதை கருத்தில் கொண்டு தேவஸ்தான நிர்வாகத்துடன் ஒத்துழைப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அவுரங்கசீப் மீது மராத்தியர்களுக்கு என்ன கோபம்? வரலாற்றில் நடந்த அந்த சம்பவம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டெல்லி பயணம்.. என்ன காரணம்?

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா உத்தவ் தாக்கரே? ஏக்நாத் ஷிண்டே கூறிய அதிர்ச்சி தகவல்..!

திருப்பூரில் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்.. தினசரி ரூ.40 கோடி வருவாய் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments