Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திராயன் – இலக்கை அடைந்து சாதனை !

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:27 IST)
விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் புவியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.

இதுவரை யாரும் ஆய்வு செய்திடாத நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய இந்தியா சந்திராயன் 2 விண்கலத்தைக் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியது.  இந்த விண்கலம் மூலம் நிலவை மேலும் புரிந்துகொள்ளவும், இந்தியாவுக்கும் மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முயல்கிறோம்.’ என இஸ்ரோ விஞ்சானிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி நிலவின் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திராயன் 2 நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி புவி சுற்று வட்டப்பாதையிலிருந்து நிலவை நோக்கி அனுப்பப்பட்ட சந்திராயன் 2. விநாடிக்கு 10.3 கி.மீ வேகத்தில் பயணித்து இன்று காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதன் பின் நிலவின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு அதன் வேகம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments