கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திராயன்-3 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இந்த விண்கலம் தற்போது வெற்றிகரமாக நிலவை நெருங்கி வருகிறது என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சந்திராயன்-3 என்ற விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது என்றும் சந்திராயன்-3 விண்கமல்ம் நான்காவது சுற்று பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடந்து உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்ததாக ஐந்தாவது சுற்று பாதையை உயர்த்தும் பணி ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரோ சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் வெற்றி கரமாக தரை இறக்கினால் நிலவில் விண்கலத்தை தரை இறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை பெறும்.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் 3 வெண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது என்றும் இந்த விண்கலம் வெற்றி அடைந்தால் நிலவில் உள்ள மர்மங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.