Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘’சந்திராயன் 3’’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (14:57 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதலுக்காக நேற்று மதியம் 2”30 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கிய நிலையில் தற்போது, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் ‘’சந்திராயன் 3’’ விண்கலம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு விண்கலம் அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் சந்திரயான் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக சந்திரயான் 1 மற்றும் 2 விண்கலங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டன.

இதில் சந்திரயான் 2 நிலவில் இறங்க இருந்த சில வினாடிகளுக்கு முன்பாக தொடர்பை இழந்தது. இந்நிலையில் இன்று நிலவுக்கு அனுப்பப்பட உள்ள சந்திராயன் 3 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இன்று விண்ணில ஏவப்பட்ட ''சந்திராயன் 3'' என்ற இந்த விண்கலம்   பூமியில் இருந்து 3.84 லட்சம் கிமீ தொலைவில் உள்ள  நிலவை சென்றடைய 40 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகிறது.

மேலும், நிலவில் இறங்க உள்ள ப்ரக்யான் ரோவரின் சக்கரத்தில் இந்திய அரசின் முத்திரையையும், இஸ்ரோவின் முத்திரையையும் எம்போஸ் செய்துள்ளனர். இதனால் ப்ரக்யான் நிலவில் இறங்கி நகர தொடங்கியதும் இந்திய அரசின் சின்னமும், இஸ்ரோவின் சின்னமும் நிலவின் தரையில் பதியும். இதன் மூலம் முதல்முறையாக நிலாவில் இந்தியா. தனது முத்திரையை பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments