Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலே இஸ்ரோ..வெற்றிகரமாக நிலவு வட்டப்பாதைக்குள் சென்றது சந்திரயான் 2

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:17 IST)
சந்திரயான் 2 விண்கலம் நிலவின் வட்டபாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில் ராக்கெட் ,விண்கலத்தை  புவி வட்டபாதையில் கொண்டு நிறுத்தியது. பின்பு சுற்றுவட்டபாதை படிபடியாக அதிகரிக்கப்பட்டு, நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2-வை சேர்க்க திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் படி, சந்திரயானின் திரவ இன்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை இயக்கப்பட்டது. இதனால் நிலவின் வட்டபாதையில் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.

விண்ணில் பாய்ந்த 28 நாட்களுக்கு பிறகு சந்திரயான் 2 விண்கலம், தற்போது நீள்வட்டபாதையில் நிலவை சுற்றி வருகிறது. இந்த செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி, விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டார் பிரிக்கப்பட்டு, செப்டம்பர் 7 அன்று நிலவில் மெதுவாக இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments