Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு..! ஆரத்தழுவி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!!

Chandrababu Naidu

Senthil Velan

, புதன், 12 ஜூன் 2024 (11:37 IST)
பிரதமர் மோடி முன்னிலையில் ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார்.
 
ஆந்திராவில் 175 சட்டசபை, 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. எதிர்க்கட்சியான சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக, நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 
 
இதில் சந்திரபாபு, பவன்கல்யாண், பாஜக கூட்டணி மொத்தம் 164 இடங்களில் வெற்றி பெற்றது. பவன்கல்யாண் கட்சி 21 இடங்களில் வென்று ஆந்திராவில் 2வது பெரிய கட்சியாக உருவானது. 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற சந்திரபாபுநாயுடு ஆட்சியை கைப்பற்றினார். பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி முன்னிலையில் ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபுநாயுடு இன்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல்நசீர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பும்  செய்து வைத்தார். தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். அதுபோல் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அமைச்சராக பதவி ஏற்றார். சந்திரபாபு நாயுடுவுடன் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். 


பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி  மற்றும் பல மாநில முதல்வர்கள்,  மத்திய, மாநில அமைச்சர்கள், திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்னும் உயருமா? இன்றைய சென்னை நிலவரம்..!