ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி வெகு நாட்களாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக உறுதி அளித்திருந்தது.
ஆனால், சமீபத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரமுடியாது என அறிவித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்து மத்திய அமைச்சர்வையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள் பதவி விலகினர்.
மேலும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்ற இரு அவைகளிளும் அம்மாநில எம்பிக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவை அனைத்தும் விரவில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி முறிவிற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மந்திய அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மத்திய அரசு நிதி மாநில அரசு நிதி என எந்த பாகுபாடும் கிடையாது. ஆனைத்தும் மக்கள் பணமே.
ஆனால், மத்திய அரசுக்கு அதிகம் வரி செலுத்துவது தென் மாநிலங்கள்தான். மத்திய அரசோ தென் மாநிலங்களில் இருந்து வரியை பெற்று வட மாநிலங்களின் வளர்ச்சியில் முதலீடு செய்கிறது. ஏன் இந்த பாகுபாடு? ஆந்திரா இந்தியாவின் அங்கம் இல்லையா?
எங்களது நிதியை எதற்காக வட மாநிலங்களுக்கு கொடுக்கிறீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் இந்த காரசாரமான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.