Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டயல் 1100: வீடு தேடி வரும் லஞ்ச பணம்....

டயல் 1100: வீடு தேடி வரும் லஞ்ச பணம்....
, வியாழன், 28 டிசம்பர் 2017 (18:22 IST)
அரசுதுறையை சார்ந்த அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் சாதாரண ஒன்றாகிவிட்டது. பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகிய அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் பிரதாண ஒன்றாகவுள்ளது. 
 
லஞ்சம் அதிக அளவில் புழங்கும் மாநிலமாக கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஆந்திரா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதற்கு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். 
 
அரசு பணியாளர்களுக்கு யாராவது லஞ்சம் கொடுத்து இருந்தால் 1100 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். இதன் மூலம் அந்த பணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என கடந்த மே மாதம் அறிவித்தார்.
 
உதவி மையத்தில் புகார்கள் குவிய தொடங்கின. தற்போது, இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதிகாரிகள் அனைவரும் யாரிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கினார்களோ, அவர்களின் வீடுதேடி சென்று வாங்கிய பணத்தை திருப்பி அளித்து வருகின்றனர். 
 
மேலும் புகார் அளிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம்  விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், இந்த புகார்கள் எல்லாம் சுமார் 500, 1000 ரூபாய் லஞ்சம் தொடர்பாகவே உள்ளதாக தெரியவந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்வில் வெற்றி அடைய புத்தாண்டில் இவற்றை பழகுங்கள்....