Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 16 ஜனவரி 2025 (17:24 IST)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திராவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஆந்திராவில் உள்ள தம்பதியினர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், செய்தியாளர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தபோது, முந்தைய தலைமுறையில் அதிக குழந்தைகளை தம்பதிகள் பெற்றுக் கொண்டதாகவும், தற்போதைய தலைமுறையினர் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்வதாகவும், இதனால் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வீழ்ச்சியின் ஆபத்தை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்ற நிலைமை நம் நாட்டிற்கும் வந்து விடக்கூடாது என்றும், பிறப்பு விகிதம் குறைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்றும், மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் தம்பதியினர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகையை வாங்காதவர்களுக்கு எப்போது கிடைக்கும்? அதிகாரிகள் தகவல்..!

இந்தியாவிலேயே தரமான காற்று கிடைக்கும் நகரம்.. நெல்லைக்கு முதலிடம்..!

ஜனவரி 18 முதல் 21 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments