Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை நிராகரித்த சந்திரபாபு நாயுடு!

Webdunia
புதன், 29 மே 2019 (20:01 IST)
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்று மாபெரும் வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, நாளை அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார். விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த பதவியேற்பு விழாவில் பல மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.
 
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டியே போனில் அழைத்து அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இன்று கூடிய தெலுங்கு தேச கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெலுங்கு தேச கட்சியின் சார்பில் ஒரு குழு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவிக்கும் என்றும், பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எந்த தெலுங்கு தேச கட்சியின் தலைவர்களும் கலந்து கொள்ள போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை சந்திரபாபு நாயுடுவும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
 
இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியின் வட்டாரங்கள் கூறியபோது, கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றால் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் ஆனால் பொது இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பதவியேற்பு விழா நடப்பதால் இந்த விழாவை தெலுங்கு தேச கட்சி நிராகரித்ததாகவும் கூறினர்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments