Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

Siva
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (15:41 IST)
சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு வழக்கு குறித்த விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய விசாரணையின்போது வாக்குச் சீட்டுகள் தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்த 8 கவுன்சிலர்களின் வாக்குகளும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு செலுத்தப்பட்டுள்ளது உறுதியானது. 
 
இன்றைய விசாரணையில் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மாசிஹ் ஆஜராகியுள்ள நிலையில் தலைமை நீதிபதி அவரிடம் சேதப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு என்பதால் பேனாவை வைத்து குறியிட்டதாக நேற்று கூறினீர்கள். எங்கே இந்த வாக்குச் சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது? என்று கேட்டார்.
 
அதற்கு பதில் எதுவும் கூறாத மசிஹ், வாக்குச்சீட்டை தனது வழக்கறிஞருடன் பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் நீதிமன்ற அறையில் வாக்கு எண்ணிக்கை அன்று பதிவான வீடியோ காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸின் உச்ச தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேல்! - உறுதிப்படுத்திய நேதன்யாகு!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லணும்! - நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டு.. உடனே பதவியில் இருந்து விலகிய பாஜக பிரபலம்..!

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்! குடிமகன்களுக்கு இனி காத்திருக்க வேண்டாம்..!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலைகளா? - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments