Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (10:04 IST)
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்தச் சட்டத்தை செயல்படுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அதனை நிறைவேற்றியது. பின்னர் குடியரசுத் தலைவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.
 
ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது இஸ்லாமியர்களுக்கு எதிரான  சட்டமாகும். எனவே, இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது," என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"வக்பு வாரிய திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என அந்த மாநில முதல்வர் கூறியது சரியானது அல்ல. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தவொரு சட்டமும் இந்தியா முழுவதும் அமலுக்கு வரவேண்டும். ஏதேனும் ஒரு மாநிலத்தில் சட்ட அமல்படுத்தலில் சிக்கல் ஏற்பட்டால், சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்."
 
மேலும், அவர் கூறியதாவது: "குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோதும், மம்தா பானர்ஜி அதை மேற்குவங்கத்தில் அமல்படுத்த முடியாது என்று கூறினார். ஆனால், அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதுபோல, நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களை எந்த மாநிலமும்   ‘அமல்படுத்த முடியாது’ எனச் சொல்லும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை."
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

முதன்முறையாக விண்ணைத் தொண்ட ‘சிங்க’ பெண்கள் குழு! - வரலாற்று சாதனை படைத்த பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments