Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைவான சீன ஸ்மார்ட்போன்களுக்கு தடை?? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (09:09 IST)
இந்தியாவில் விலை குறைவான சீன ஸ்மார்ட்போன்களை தடை செய்ய உள்ளதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் 4ஜி, 5ஜி என தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டே செல்லும் அதே சமயம் புது புது மாடல் ஸ்மார்ட்போன்களும், ஸ்மார்ட்போன் கம்பெனிகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரும்பங்கை சீன நிறுவனங்களான ரியல்மி, ஜியோமி, ஓப்போ, விவோ போன்றவை பெற்றுள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ரூ.12 ஆயிரத்திற்கு குறைவான ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்க உள்ளதாகவும், இந்திய தயாரிப்புகளை வளர்த்தெடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால் மத்திய அரசு அப்படியான திட்டம் எதுவும் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம் அளித்தபோது “வெளிநாட்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. அவர்களது விற்பனை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதுபோல இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments