3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை: வேகமாக பரவு டெல்டா பிளஸ்

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (12:19 IST)
டெல்டா பிளஸ்வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக மூன்று மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து செல்லும் திறன் கொண்டது என்றும் எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களாக இருந்தாலும் இந்த புதிய டெல்டா பிளஸ் வைரஸ் எளிதில் தொற்று பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 
 
டெல்டா பிளஸ் வைரஸால் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்துள்ளார். எனவே முதலில் இந்த மூன்று மாநிலங்களும் அதனை அடுத்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் டெல்டா பிளஸ் வைரஸ் வைரஸ் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாற வாய்ப்பு உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments