Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா உறுதி செய்யப்பட்டால், 15 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (22:22 IST)
மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தில் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தில், யாருக்காவது அல்லது அவரை சார்ந்திக்கும் நபருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். 15 நாட்களுக்கு பிறகும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், சிறப்பு விடுப்பை தவிர்த்து, மற்ற விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், 20 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். 20 நாட்களுக்கு பிறகும் சிகிச்சை தொடர்ந்தால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணத்தை சமர்ப்பித்து, விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
 
கொரோனா தொற்றுக்கு ஆளான நபரிடம், மத்திய அரசு ஊழியர் தொடர்பு வைத்திருந்தால், அவர் ஏழு நாட்களுக்கு ஆன் டூட்டி அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த நடைமுறை கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments