இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மாநில அரசுகள் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்து மத்திய அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளது. மேலும் பைசர் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் வெற்றிக்கண்டால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான காலக்கெடு குறையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.