Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்மார்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதியுங்கள்! – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (12:18 IST)
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பாலூட்டும் தாய்மார்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது பாதிப்புகள் மெல்ல குறைந்து வருகிறது. கொரோனாவால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அவர்தம் குழந்தைகள் எளிதில் பாதிப்படைவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்றும், மற்ற நிறுவனங்களுக்கும் மாநில அரசுகள் இதை அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியில் பாஜகவுக்கு வேலை செய்பவர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி.. ஒரு நபர் கைது..!

விஜய் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் - அமைச்சர் துரைமுருகன்

அதிமுக பலவீனமாக இருப்பது உண்மைதான்.. டிடிவி தினகரன்

சிறைக் கைதிகளில் ஐந்து பேருக்கு எச்ஐவி பாதிப்பு .. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments