அரசு ஊழியருக்கான பணி நேரத்தை 9 லிருந்து 12 மணி நேரமாக நீடிக்கும் பரிசீலனை எதுவும் தற்போது இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் புதிய ஊதிய குறியீடு மசோதாவின் மூலம் நிறுவனங்களில், ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மற்றும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை நேரத்தை உயர்த்த போவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது பணியாளர்களின் வேலை நேரமாக இருக்கும் 9 மணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தலாம். அவ்வாறு பணி நேரம் உயர்த்தப்பட்டால் 6 நாட்கள் செயல்பட்டு வந்த வேலை நாள் 4 நாட்களாக குறைக்கப்படும். இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வேலை நேரத்தில் 3 மணி நேரத்தை அதிகமாக பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் தற்போது அரசு ஊழியருக்கான பணி நேரத்தை 9 லிருந்து 12 மணி நேரமாக நீடிக்கும் பரிசீலனை எதுவும் தற்போது இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.