Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக தரப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:09 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை அதிகரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு ரூ.150 என்றும், மாநில அரசுக்கு ரூ.400 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளை ரூ.150 என்று வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தர உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments