Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுக்கு 911, இந்தியாவுக்கு 112 -அவசரகால உதவி செயலி அறிமுகம்

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (10:22 IST)

நாடு முழுவதும் அவசரகாலங்களில் தொடர்பு கொள்வதற்குப் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
 

இந்தியாவில் தனித்தனியாகப் பல அவசரகால கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் பலத்துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக காவல்துறைக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101 ஆகிய எண்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன.

ஆனால் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அனைத்து உதவிகளுக்கும் ஒரே பொதுவான எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அது போன்ற வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தும் விதமாக 112 என்ற எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இரண்டு தினங்களுக்கு முன்னால் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 112 இந்தியா என்ற புதிய செயலியையும் அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது ’இந்த செயலிலியில் ஷவுட் (shout) என்ற வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பிரச்சனையில் சிக்கும் பெண்கள் அருகில் உள்ள அவசர உதவி மையத்தை அணுகி உதவி பெறலாம்.’

இந்த செயலியின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments