வாட்ஸப்பின் புதிய கொள்கை மற்றும் நிபந்தனைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மக்கள் பலர் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செயலிகளுக்கு மாறி வருகின்றனர். வாட்ஸப் நிறுவனம் தாங்கள் எந்த தகவலையும் சேமிக்கவில்லை என்று விளக்கமும் அளித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸப்பின் புதிய கொள்கைகள் குறித்து ஜனவரி 21ல் விளக்கமளிக்க பேஸ்புக், ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் ஆஜராக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.