பிரதமர், குடியரசு தலைவரின் புகைப்படங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தேசிய கொடி, அசோக சக்கரம், அரசு முத்திரை போன்றவற்றை தவறாக பயன்படுத்தினால் 500 ரூபாய் அபராதம் என்ற நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவரின் புகைப்படங்களை வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் 1 லட்சம் அபராதமும், மீண்டும் அதே தவறை செய்தால் 5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பலர் பிரதமரின் படங்களை வணிக ரீதியான விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.