ஒரு வெங்காயம் கூட வெளியே போகக்கூடாது! – தடை விதித்தது மத்திய அரசு

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (14:41 IST)
இந்தியாவில் வெங்காயத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக வெங்காயம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. கிலோ 45 வரை விற்று வந்த வெங்காயம் ஒரே நாளில் கிலோ 60 ரூபாயாக விலை உயர்ந்தது.

நாட்டில் வெங்காயத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கையிறுப்பில் உள்ள வெங்காயங்களை பல வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் வெங்காய தட்டுபாடு அதிகரிக்கும் சூழல் உள்ளது. அதனால் வெங்காயம் தட்டுபாடு தீரும் வரை வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments