Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Siva
வியாழன், 16 ஜனவரி 2025 (16:47 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் அனுமதி அளித்ததுடன், அதற்குத் தகுந்த மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

மத்திய அரசு ஊழியர் சங்கத்தின் பரிந்துரையின்படி சம்பள கமிஷன் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு சம்பள கமிஷன் பரிந்துரை 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. தற்போது, பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகையை வாங்காதவர்களுக்கு எப்போது கிடைக்கும்? அதிகாரிகள் தகவல்..!

இந்தியாவிலேயே தரமான காற்று கிடைக்கும் நகரம்.. நெல்லைக்கு முதலிடம்..!

ஜனவரி 18 முதல் 21 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments