Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தின விழாவில் இடம்பெறுமா தமிழக வாகனம்? – மத்திய அரசு விண்ணப்பிக்க அறிவிப்பு!

Advertiesment
Parade
, புதன், 28 செப்டம்பர் 2022 (13:09 IST)
அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் இடம்பெறும் மாநில அலங்கார வாகனங்கள் விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா அன்று மாநில அரசுகளின் அலங்கார வாகனங்கள் டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் இடம்பெறும். இதற்காக மாநில அரசுகள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார வாகனம் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 2023ம் ஆண்டு குடியரசு தின விழாவில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கலந்து கொள்ள விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த முறை அலங்கார ஊர்திகளுக்கு தலைப்பாக சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை எதிர்வரும் 30ம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்தில் ஓசிப்பயணம்: அமைச்சர் பொன்முடிக்கு சீமான் கண்டனம்