Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன், உயிர் காக்கும் கருவி தயாரா இருக்கட்டும்! – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (11:05 IST)
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகளை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக குறைந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு புதிய வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா மருத்து உள்கட்டமைப்பை தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ தரத்திலான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments