Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்புக்கு நிதி: தமிழகத்திற்கு ரூ335 கோடி ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (16:42 IST)
கொரோனா பாதிப்பில் இருக்கும் மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கி வரும் நிலையில் தமிழகத்திற்கு 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.335 கோடி தவணை நிதியாக மத்திய அரசு விடுவித்தது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
 
தமிழகத்தை போலவே மொத்தம் 14 மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
ஆந்திர மாநிலத்திற்கு ரூ.491 கோடியும், அசாம் மாநிலத்திற்கு 631 கோடியும், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு 952 கோடியும், கேரளாவிற்கு 1276 கோடியும், மணிப்பூருக்கு 235 கோடியும், மேகாலாய மாநிலத்திற்கு 40 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு 118 கோடியும், நாகலாந்துக்கு 326 கோடியும், பஞ்சாபுக்கு 638 கோடியும், திரிபுராவுக்கு 269 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு 423 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 417 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments