Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரோக்ய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தெரியவில்லை – மத்திய அமைச்சகம் அதிர்ச்சி பதில்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:07 IST)
பிரதமர் மோடியால் கொரோனா லாக்டவுனின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆரோக்ய சேது செயலியை உருவாக்கியது யார் என்ற தகவல் இல்லை என மத்திய மின்னணு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த போது நிலையில் மக்கள் கொரோனா தாக்கம் உள்ள பகுதிகள் எவையெவை என கண்டறிவதற்காகவும், அவற்றை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் “ஆரோக்ய சேது” என்ற மொபைல் செயலியை மத்திய அரசு ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பிரதமர் மோடியே தன் பேச்சின் போது அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால் இந்த செயலி பாதுகாப்பு குறைவானது என்றும், எளிதில் ஹேக் செய்யக்கூடிய தனிநபர் விபரங்களை கண்காணிக்கும் செயலி என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து மத்திய தகவல் மையம் இந்த செயலியை யார் எப்போது உருவாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியது.

இதையடுத்து இந்த செயலியை யார் உருவாக்கியது என்று தமக்கு தெரியாது என மத்திய மின்னணு அமைச்சகம் அதிரடியாக பதிலளித்துள்ளது. இதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய தகவல் ஆணையம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments