Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மொபைல் செயலி ' மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு - அமித் ஷா

'மொபைல்  செயலி ' மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -  அமித் ஷா
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (14:08 IST)
மக்கள் தொகை கணக்கெடுப்பு  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இந்நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 
இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிதாவது :
 
2021 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பு மக்கள் தொகை , மொபைல் ஆப் மூலம் நடத்தப்படும். இதில், காகிதப் பயன்பாடு கணிசமாக குறைக்கப்பட்டு  டிஜிட்டல் முறைக்கு மாறும் என தெரிவித்தார்.
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்புகள் உருவாகும்.
 
மேலும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எனபது மத்திய அரசின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் என தெரிவித்தார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”இந்த பூமி மட்டுமே நமக்கானது”… நாசா வெளியிட்ட பூமியின் அழகான புகைப்படங்கள்