Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்ஜர் போட்டுவிட்டு தூங்கியதால்...செல்போன் வெடித்து 4 குழந்தைகள் பலி!

Sinoj
செவ்வாய், 26 மார்ச் 2024 (16:00 IST)
மீரட்டில் சார்ஜர் போட்டு மறந்து தூங்கியதால்  செல்போன் வெடித்ததில் 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டின்  மோடிபுரம் பகுதியில் வசித்து வருபவர். இவருக்கு மனைவி மற்றும் 4  குழந்தைகள்.
 
கடந்த சனிக்கிழமை இரவு குழந்தைகள் வீட்டிற்குள் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தனர்.
 
அப்போது சார்ஜர் குறையும்போது, அவர்கள் போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்க சென்றனர்.
 
நள்ளிரவில் செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக செல்போன் வெடித்து, அருகில் உள்ள பொருள்களிலும் தீப் பரவியது.
 
இதில், 4 குழந்தைகளும்  தீயில் சிக்கிக் கொண்டனர்.அவர்களை காப்பாற்ற முயன்றபோது அவர்களும் தீயில் மாட்டிக் கொண்டனர்.
 
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர் தீயை அணைத்து அவர்களைப் காற்றியுள்ளனர். பின்னர் தீயில் காயமடைந்த அவர்களை மீட்டு எல்.எல்.ஆர்.எம் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதில், 4 குழந்தைகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
 
பெற்றோர்களான ஜானியும், பபிதாவும் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக நிலையில்  சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments