சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வின் வினாத்தாளும் 28-ந்தேதி 10-ம் வகுப்பு கணிததேர்வின் வினாத்தாளும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து துறைரீதீயிலான விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் லீக் விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 9 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜார்கண்டில் பயிற்சி மைய உரிமையாளர் ஒருவர் உள்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 12 பேர்களை ஜார்கண்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் லீக் ஆன இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த முடிவு செய்த சிபிஎஸ்இ , 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வை வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு கணிததேர்வின் மறுதேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது