Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்: ஜிஎஸ்டி அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு

Advertiesment
பதிலடி கொடுத்த ஜெகன் மோகன்: ஜிஎஸ்டி அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு
, புதன், 10 ஜூலை 2019 (13:43 IST)
தெலுங்கு தேசம் ஆட்சியில் தன் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரி வீட்டில் தற்போது ரெய்டு நடத்தி பதிலடி கொடுத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது ஜெகன் மோகன் ரெட்டி வீடுகள் மற்றும் சொத்துகள் மீது ரெய்டு நடத்தியவர் அமலாக்கத்துறை அதிகாரி ஸ்ரீனிவாச காந்தி. அமலாக்கத்துறை இணை இயக்குனர் உமாசங்கர் கவுடுவும், உதவி இயக்குனர் ஸ்ரீனிவாச காந்தியும் சேர்ந்து ஆளுங்கட்சியின் பேச்சை கேட்டு வருமானவரி சோதனை என்ற பெயரில் எனக்கு வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள் என பிரதமருக்கு ஜெகன் மோகன் கடிதம் எழுதினார்.

இப்போது ஆட்சி ஜெகன் மோகன் கையில் இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீனிவாச காந்தி சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக புகார்கள் எழுந்தது. தற்போது சிபிஐ நடத்திய ரெய்டில் ஸ்ரீனிவாச காந்தி வீட்டிலிருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்ரீனிவாச காந்தியின் ஆண்டு வருமானமே ஒரு கோடிதான் என்ற நிலையில் அவரது மகளுக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் 70 லட்சம் கட்டி சீட் வாங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இதேபோல பல பகுதிகளில் வீடுகள், நிலங்கள் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மற்ற சந்திரபாபு நாயுடு ஆதரவு அதிகாரிகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கும் செல்லப்பிராணிகளின் ‘இன்விசிபிள் சேலஞ்ச்”!!.