Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திராணி - சிதம்பரம் ரூ.9,96,000 டீலிங்: அம்பலமாக்கிய சிபிஐ!!

Advertiesment
இந்திராணி - சிதம்பரம் ரூ.9,96,000 டீலிங்: அம்பலமாக்கிய சிபிஐ!!
, சனி, 19 அக்டோபர் 2019 (11:46 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் இந்திராணி முகர்ஜியிடம் ப.சிதம்பரம் தனது மகன் நிறுவனத்திற்கு 10 லட்சம் அனுப்புமாறு கேட்டதாக சிபிசி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜியும் இந்திராணி முகர்ஜியும் தங்களது சொந்த மகள் ஷீனா போராவை கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  
இந்த நிலையில் தான் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி சம்மதம் தெரிவித்தார். இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திராணி சிபிஐயிடம் வழக்கு குறித்த வாக்குமூலத்தை அளித்தார். இதன் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். 
webdunia
இந்நிலையில் சிபிஐ தரப்பில் 2000 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி சிதம்பரத்தை சந்தித்தற்கான ஆதரங்கள் உள்ளதாகவும், சிதம்பரம் அந்நிய முதலீடு பெற ஒப்புதல் அளிக்க தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பணம் போட சொன்னதகாவும், அதன்படி ரூ.9,96,000 கைமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, இந்திராணி அப்ரூவராக மாறி விட்டதால் அவர் மன்னிக்கப்பட்டு விடப்பட்டுள்ளதாகவும் அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது எனவும் சிபிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொருளாதார மந்தநிலையின் போதும், தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. டாப்!!