Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு ; எடியூரப்பா விடுதலை : நீதிமன்றம் தீர்ப்பு

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு ; எடியூரப்பா விடுதலை : நீதிமன்றம் தீர்ப்பு

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு ; எடியூரப்பா விடுதலை : நீதிமன்றம் தீர்ப்பு
, புதன், 26 அக்டோபர் 2016 (13:01 IST)
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிற்காக ரெட்டி சகோதரர்களிடம் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.


 

 
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாநிலத்தில் நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒப்பந்தம் தொடர்பாக, ரெட்டி சகோதரர்களிடம் ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக, அப்போது முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, அவரின் இரு மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கிற்காக, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான எடியூரப்பாவிடம் மொத்தம் 473 கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான கேள்ளிகளுக்கு அவர் இல்லை, தெரியாது, பொய் என தனக்கு இதற்கும் தொடர்பு இல்லாத விதத்திலேயே பதில் அளித்தார். இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று நீதிபதி கேட்டதற்கு, இது பொய் வழக்கு, எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்டது. அரசுக்கு எதிராக செயல்பட்டதோ, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தவோ யோசித்ததே இல்லை. என்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டவே இப்படி வழக்கு போட்டிருக்கிறார்கள் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார் எடியூரப்பா.
 
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், எடியூரப்பா அவரது மகன்கள் மற்றும் அவரது மருமகன் ஆகிய 4 பேரும் நிரபராதிகள் என்று கூறி வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த எடியூரப்பா “நான் குற்றமற்றவன் ஆகிவிட்டேன். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிரடி தீபாவளி ஆஃபர்!!