Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.ஐக்கு செக்!!! அதிரடியில் இறங்கிய மம்தா பானர்ஜி

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2018 (11:05 IST)
ஆந்திராவைத் தொடர்ந்து மேற்குவங்கத்திலும் சிபிஐ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கடுப்பான பாஜக அரசு சந்திரபாபு நாயுடுவுக்கு பல வகைகளில் குடைச்சல் கொடுத்து வருவதாகக் கூறப்பட்டது. கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் வீடுகளில் அதிரடியாக சி.பிஐ.யை ஏவி சோதனைகள் செய்ய வைத்தது.
 
இதனால் அதிருப்தியடைந்த சந்திரபாபு நாயுடு எங்களுக்கா செக் வைக்கிறீர்கள் இருங்கள் நான் என்ன செய்கிறேன் பாருங்கள் என்று அதிரடியான முடிவை அறிவித்தார்.
 
இந்தியாவில் டெல்லியைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் சிபிஐ சோதனை செய்ய அந்தந்த மாநிலங்களின் பொது ஒப்புதல் தேவை.  அந்த பொது ஒப்புதலை நீக்கி புதிய அரசாணையை வெளியிட்டார். அதன்படி ஆந்திராவில் இனி சிபிஐயால் சோதனைகளில் ஈடுபட முடியாது.
 
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சரும் தங்கள் மாநிலத்தில்  சி.பி.ஐ. நுழைவதற்கு தடைவிதித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கு வங்கத்திற்குள் விசாரணை மற்றும் சோதனைக்காக அனுமதியின்றி நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது. 
 
இதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments