நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது.
இந்த நிலையில் ஆந்திராவில் இன்று முதல் ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா அரசு ஆந்திராவில் ஜாதி வாரி கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கியதாகவும் மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கணக்கெடுப்பு பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் 139 பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மட்டுமே கணக்கெடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பை நடத்த ஆந்திரா அரசு முடிவு செய்துள்ளது.
பீகாரில் ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு முடிந்த நிலையில் ஆந்திராவிலும் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எப்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.