பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பீகார் மாநில ஐகோர்ட் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவை சமீபத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்தது. இதனை அடுத்து முதல் கட்ட கணக்கெடுப்பு முடிவடைந்து சமீபத்தில் இரண்டாவது கட்ட கணக்கெடுப்பு தொடங்கியது.
இந்த நிலையில் பீகாரில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய ஏதுவாக பொருளாதார நிலை மற்றும் சாதி பற்றி விவரங்கள் தான் சேகரிக்கப்படுகின்றன என்றும் பீகார் அரசு விளக்கம் அளித்தது
இந்நிலையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹை கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
ப்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது