Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஸில் சிக்கிய பிரசாந்த் கிஷோர்: 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

Advertiesment
கேஸில் சிக்கிய பிரசாந்த் கிஷோர்: 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
, வியாழன், 27 பிப்ரவரி 2020 (11:42 IST)
பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அரசியல் சானக்கியர் என கூறப்படும் பிரசாந்த் கிஷோர், வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு அரசியல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோரின் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. 
 
இந்நிலையில் அவர் மீது சாஸ்வத் கவுதம் என்பவர், பாத் பீகார் கி என்னும் பெயரிலான தன்னுடைய கருத்துருவைப் பிரசாந்த் கிஷோர் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டு ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். 
 
005-2015 இடைப்பட்ட காலத்தில் பீகார் மாநிலம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், போதுமான வளர்ச்சி பெறவில்லை என குற்றம் சாட்டும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், பீகாரை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காக நடத்தி வரும் இயக்கம் பாத் பீகார் கி ஆகும். 
 
மேலும், இது குறித்து பரப்புரையை மேற்கொள்ள 100 நாட்களில் 1 கோடி பேரை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுத்தேர்வு முக்கிய தேதிகள்; ரிசல்ட் தேதி அறிவிப்பு!